
காற்றின் முகிழ்ப்பில்
சில்லிட்ட கல்லீரல்
மௌனத்தின் சுவாசிப்பில்
தெறித்த த்வனிகள்
சூல்கொண்ட இருளில்
ஓடிக்களைத்த குதிரைகளாய்
முணுமுணுப்புகளின் பேரொலிகள்
எரிந்த கானத்தில்
சாம்பல் கரங்கள்
குரல்வளை நெரிக்க
தரைதட்டி நின்றன
பாய்மரப் படகுகள்
காலம் கிழித்து
பாலம் உடைத்து
சிதறின ஆடுகள்
நனைந்த ஓநாய்கள்
குறுதிச் சேற்றில்
இரத்தச்சகதி பொங்க
சலனமற்ற நிர்வாணங்களாய்
பெருமூச்சுகளின் ஜ்வலிப்புகள்
பிரளய தரிசனத்தின்
ருத்ர அவதாரத்தில்
காட்சிகள் கலகலக்க
சாட்சிகள் சல்லடைகளாய்...
இரைச்சலில் அடங்கிய
ஒற்றை ஒலியாய்...
கரைச்சலில் உயிர்த்தெழுந்த
கற்றாழையாய்.....
பூமி மீண்டும் குலுங்க
செத்துப் பிழைத்தது மனிதம்
.................................................
கொத்துப் பரோட்டா புனிதம்
பிரபல முன்-பின்
நவீன படைப்பாளிகள்
அன்றி வாசகர்கள் யாரேனும்
மேற்கண்ட வரிகளுக்கு
கவிப் பொருள் கண்டால்
அல்லது கொண்டால்
நான் பொறுப்பல்ல.....
சகட்டு மேனிக்கு
கோர்த்த வார்த்தைகளின்
கலையாத மடிப்பு இது!
பச்சையாகச் செப்பினால்
ஒரு கவிதைப் பாசாங்கு!
இன்றொரு "கவிதை" செய்ய
இதுவே ஆதி சூத்திரம்
என்கிறார் நண்பர் ஒருவர்
எனது எதிர்வினை கண்டு
பாதி சூத்திரமாகவேனும்
ஏற்க வேண்டுமெனநெருக்குகிறார்...
அவர் ஏகடியம் பேசுகிறார்
எனக்குப் புரிகிறது....
உங்களுக்கு...?
அடடா! ஏன் விரைகிறீர்கள்?
நான் சீரியஸாக பேசுகிறேன்....
புரிகிறது...
இப்படித்தான் நானும்
வேகமாக, அதிவேகமாக
விரைந்திருக்கிறேன்...!
...................................................சுகதேவ்
நன்றி: தமிழ்.சிஃபி. இணைய இதழ்
சில்லிட்ட கல்லீரல்
மௌனத்தின் சுவாசிப்பில்
தெறித்த த்வனிகள்
சூல்கொண்ட இருளில்
ஓடிக்களைத்த குதிரைகளாய்
முணுமுணுப்புகளின் பேரொலிகள்
எரிந்த கானத்தில்
சாம்பல் கரங்கள்
குரல்வளை நெரிக்க
தரைதட்டி நின்றன
பாய்மரப் படகுகள்
காலம் கிழித்து
பாலம் உடைத்து
சிதறின ஆடுகள்
நனைந்த ஓநாய்கள்
குறுதிச் சேற்றில்
இரத்தச்சகதி பொங்க
சலனமற்ற நிர்வாணங்களாய்
பெருமூச்சுகளின் ஜ்வலிப்புகள்
பிரளய தரிசனத்தின்
ருத்ர அவதாரத்தில்
காட்சிகள் கலகலக்க
சாட்சிகள் சல்லடைகளாய்...
இரைச்சலில் அடங்கிய
ஒற்றை ஒலியாய்...
கரைச்சலில் உயிர்த்தெழுந்த
கற்றாழையாய்.....
பூமி மீண்டும் குலுங்க
செத்துப் பிழைத்தது மனிதம்
.................................................
கொத்துப் பரோட்டா புனிதம்
பிரபல முன்-பின்
நவீன படைப்பாளிகள்
அன்றி வாசகர்கள் யாரேனும்
மேற்கண்ட வரிகளுக்கு
கவிப் பொருள் கண்டால்
அல்லது கொண்டால்
நான் பொறுப்பல்ல.....
சகட்டு மேனிக்கு
கோர்த்த வார்த்தைகளின்
கலையாத மடிப்பு இது!
பச்சையாகச் செப்பினால்
ஒரு கவிதைப் பாசாங்கு!
இன்றொரு "கவிதை" செய்ய
இதுவே ஆதி சூத்திரம்
என்கிறார் நண்பர் ஒருவர்
எனது எதிர்வினை கண்டு
பாதி சூத்திரமாகவேனும்
ஏற்க வேண்டுமெனநெருக்குகிறார்...
அவர் ஏகடியம் பேசுகிறார்
எனக்குப் புரிகிறது....
உங்களுக்கு...?
அடடா! ஏன் விரைகிறீர்கள்?
நான் சீரியஸாக பேசுகிறேன்....
புரிகிறது...
இப்படித்தான் நானும்
வேகமாக, அதிவேகமாக
விரைந்திருக்கிறேன்...!
...................................................சுகதேவ்
நன்றி: தமிழ்.சிஃபி. இணைய இதழ்